உத்தர பிரதேசத்தில் மீண்டும் மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்க முடிவு

By | April 19, 2022


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.


லக்னோ,

இந்தியாவில் கொரோனா  வைரஸ் பரவல்  மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,183 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது நேற்றை விட 90 சதவீதம் ஆகும். டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று தொற்று பாதிப்பு முந்தைய நாளைவிட அதிகமாக பதிவானது. 

அதாவது நேற்ரு முன் தினம் 23 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 30 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவ்வாறாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.  தொற்று பாதிப்பு குறைந்து வந்தால், கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் தளர்த்தி பல்வேறு மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டன. இதில், மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்பதும் அடங்கும். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ள சூழலில், இன்று உத்தரபிரதேசத்தில் ஆய்வு க் கூட்டம் நடைபெற்றது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தில் மாஸ்க்  அணிவதை மீண்டும் கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆய்வுக்கூட்டத்திற்கு இந்த தகவவலை தெரிவித்தார்.  யோகி ஆதித்யநாத்  மேலும் கூறுகையில், “ உத்தர பிரதேசத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு உயர்ந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால், மக்கள் அச்சம் அடைய வேண்டியது இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

See also  (ÖZET) Antalyaspor - Konyaspor maç sonucu: 3-2 - Süper Lig